\
பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் புகைப்படம் - பாஜக நிர்வாகி கைது

பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் புகைப்படம் - பாஜக நிர்வாகி கைது

பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் புகைப்படம் - பாஜக நிர்வாகி கைது
Published on

கோவை மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமரின் புகைப்படத்தை வைத்துச் சென்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர், அங்கு பிரதமரின் புகைப்படத்தை வைத்து விட்டுச் சென்றனர். இதனால், அதிருப்தி அடைந்த பிறக்கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதாவினரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் ஆலந்துறை காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com