\
பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகை - தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி

பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகை - தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி

பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகை - தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி
Published on

பிப்ரவரி 25 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியிருக்கிறது. அதிமுக பாஜக உடனும், காங்கிரஸ் திமுக உடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

தமிழகத்தில் சென்னை மெட்ரோ சேவை உள்ளிட்ட பலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ள நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பிரதமர் மோடி பிப்ரவரி 25 ஆம் தேதி மீண்டும் தமிழக வர இருப்பதாக தெரிவித்தார்.

கோவைக்கு வரும் அவர் அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி பிப்.21 ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சேலத்திற்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் பிப்.19 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சி.டி.ரவி தகவல் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com