18 எம்.எல்.ஏக்கள் வழக்கு அணுகுண்டா? புஸ்வாணமா? - தமிழிசை பேட்டி
தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தான் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகமே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது இன்று மதியம் 1 மணியளவில் வெளியாகவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் 18 எம்.எல்.ஏக்களின் நிலை என்னவாகும் என்பது தான். உயர்நீதிமன்றம் தான் இதற்கு முடிவு செய்யவேண்டும். வழக்கின் முடிவு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், இல்லையென்றால் புஸ்வாணமாக போகவும் செய்யலாம். அதனால் தமிழக அரசியலில் இது அணுகுண்டாக மாறப்போகிறதா? இல்லை புஸ்வாணமாக போகப்போகிறதா என்பதை நாம் ஒரு மணிக்கு தான் பார்க்க முடியும்” என்று தெரிவித்தார்.