"எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நடந்து முடிந்தது வேல் யாத்திரை!" - எல்.முருகன்

"எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நடந்து முடிந்தது வேல் யாத்திரை!" - எல்.முருகன்
"எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக நடந்து முடிந்தது வேல் யாத்திரை!" - எல்.முருகன்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள், அதற்குப் பின்புலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேட்டியளித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 6 ம் தேதி பாஜக சார்பில் தொடங்கப்பட்ட வேல் யாத்திரை திருச்செந்தூரில் இன்று முடிவடைகிறது. இதன் நிறைவு விழா இன்று திருச்செந்தூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நெல்லையிலிருந்து அக்கட்சியின் மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.

அதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் திருச்செந்தூரில் நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். எதிர்பார்த்ததைவிட வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள், அதற்குப் பின்புலமாக இருந்தவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் நிறைவு நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் அவை அனைத்தையும் தாண்டி வேல் யாத்திரை துவங்கி இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியிலும் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். வேல் யாத்திரை மிகப் பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com