\
’’ஆற்காடு வீராசாமி இறந்து விட்டார்’’ - தவறான தகவலை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை!

’’ஆற்காடு வீராசாமி இறந்து விட்டார்’’ - தவறான தகவலை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை!

’’ஆற்காடு வீராசாமி இறந்து விட்டார்’’ - தவறான தகவலை கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை!
Published on

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய தவறான தகவல் கொண்ட வீடியோவை, உண்மைத்தன்மை அறியாமல் அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை சொல்லும்முன், அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக பேசினார்.

85 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன் உள்ள நிலையில், அண்ணாமலை பேசியதன் உண்மைத்தன்மை அறியாமல் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அவரது
ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com