\
"தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை எனக்கூற முடியுமா?" - பாஜக குஷ்பு கேள்வி

"தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை எனக்கூற முடியுமா?" - பாஜக குஷ்பு கேள்வி

"தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை எனக்கூற முடியுமா?" - பாஜக குஷ்பு கேள்வி
Published on

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என முதலமைச்சர் அறிக்கை வெளியிட முடியுமா என்று நடிகையும் பாரதிய ஜனதா தேசியக்குழு உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகை குஷ்பு, ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி தெரியும்; திமுகவினருக்கு அது தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்வர் என்று விமர்சித்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை மவுனம் காப்பது ஏன் என்றும் குஷ்பு வினவினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com