\
பாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.!

பாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.!

பாஜக போராட்டத்திற்கு பங்கேற்க சென்ற குஷ்பு கைது.!
Published on

பாஜக போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை போலீசார் கைது செய்தனர்

திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்ட குஷ்புவை போலீசார் கைது செய்தனர். போலீசார் தடை விதித்த நிலையில் பாஜக போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் பாஜக மகளிர் அணியினரும் போராட்டம் அறிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

கைதுக்கு பின்னர் ட்வீட் செய்துள்ள குஷ்பு, நாங்கள் ஒருபோதும் அராஜகத்துக்கு தலைவணங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com