வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என்பதன் பொருள் என்ன?: பாஜகவுக்கு கி.வீரமணி கேள்வி

வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என்பதன் பொருள் என்ன?: பாஜகவுக்கு கி.வீரமணி கேள்வி
வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என்பதன் பொருள் என்ன?: பாஜகவுக்கு கி.வீரமணி கேள்வி

அதிமுக ஆட்சியைத் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியதன் பொருள் என்ன? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் ஒரு பேட்டியில், அதிமுக ஆட்சியைத் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என்று கூறியதன் பொருள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவின் கைப்பொம்மையாக அதிமுக ஆட்சி ஆகிவிட்டது என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. எனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு மக்களாட்சியின் மாண்பினைக் காக்க வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com