“சி.ஏ.ஏ போராட்டம் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது” - பாஜக பேச்சாளர் கவுதமி

“சி.ஏ.ஏ போராட்டம் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது” - பாஜக பேச்சாளர் கவுதமி
“சி.ஏ.ஏ போராட்டம் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது” - பாஜக பேச்சாளர் கவுதமி

உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவார்கள் என பாஜக நட்சத்திர பேச்சாளர் கவுதமி நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெருவார்கள் என நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் நல்ல வளர்ச்சி திட்டம் கொண்டு வரப்படும். அன்றாட வாழ்வில், உள்ளூர் பிரச்னைகளை தீர்க்கவே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களால் இந்தத் தேர்தலில் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தோ, பிரச்னையோ இல்லை. இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டும் என்றே
தவறாக பிரச்னை செய்கின்றனர்.

இந்தப் போராட்டங்கள் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இப்போது தான் நிறைய பேர் இந்த சி.ஏ.ஏ சட்டத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை புரிந்து கொளளாமல், தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தப் போராட்டத்திற்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என யோசிக்க வேண்டும். பல வளர்ச்சி நிலைகளை கணக்கில் கொண்டுதான் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது நியாமானது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com