மருத்துவர் இல்லை, உபகரணங்களும் இல்லை -சென்னையில் ஸ்பெஷல் மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினர்

மருத்துவர் இல்லை, உபகரணங்களும் இல்லை -சென்னையில் ஸ்பெஷல் மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினர்

மருத்துவர் இல்லை, உபகரணங்களும் இல்லை -சென்னையில் ஸ்பெஷல் மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினர்
Published on

மருத்துவர்கள் இன்றி, உபகரணங்கள் இன்றி சென்னையில் மருத்துவ முகாம் நடத்தியுள்ளனர் பாஜகவினர்.

ஏழை, எளிய மக்களுக்கான அடிப்படை மருத்துவ பரிசோதனை முகாம் இன்று மாலை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள அரசு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘மோடி ஹெல்ப் லைன்’ என பெயர் வைக்கப்பட்ட அந்த மருத்துவ முகாமை பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி திறந்து வைத்தார். மருத்துவ பரிசோதனை முகாமில் ரத்தக்கொதிப்பு பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை ஆகிய உடல் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முகாம் என்ற பெயரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ச்சித் தொடங்கியது. ஆனால் முகாமில் மருத்துவ பரிசோதனை சம்மந்தமாக எந்த ஒரு மருத்துவக் கருவியோ, உபகரணங்களோ அங்கு இடம் பெறவில்லை. அதேபோல் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் அங்கு இல்லை. மாறாக அவ்விடம் முழுக்க பாஜகவினரே அதிக அளவு இருந்துள்ளனர். மேலும் மருத்துவ முகாமுக்கு தேர்வு செய்யப்பட்ட அந்த வீடும் மிகவும் சிறியதாக இருந்ததால், அங்கு தனி மனித இடைவெளிகூட கடைபிடிக்க முடியாத நிலை இருந்தது.

உள்ளே ஒரு பெண் மட்டும் மருத்துவர் போல டாக்டர் கோட் அணிந்து டேபிளுக்கு அருகில் அமர்ந்திருந்தார். விசாரித்தபோது, அவரும் மருத்துவர் இல்லை என்பது தெரியவந்தது. பிறகு ஏன் அவர் அங்கு அவ்வாறு உடையணிந்து அமர வைக்கப்பட்டார் என்பது, கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படியான ஒரு முகாமைத் தொடங்கிய வி.பி துரைசாமி, இதுபோல ஒரு லட்சம் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய வி.பி துரைசாமி, நீட் விவகாரம் - சிலிண்டர் விலை ஏற்றம் - பொதுத்துறை நிறுவனங்கள் வாடகைக்கு விடப்படுவது குறித்தும் பேசினார்.

அப்போது, “நீட் தேர்வை ரத்துசெய்ய தமிழக அரசுக்கு உரிமை கிடையாது. காரணம் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசு, மாநில அரசு அல்ல. நீட் விவகாரத்தில் இந்தியாவில் இருக்கும் 30 மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு மாநிலம் மட்டும் இப்படி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்கிறது. இதெல்லாம் அவர்கள் தேர்தல் வாகுறுதிக்காக சொல்லியது.

சிலிண்டர் விலை ஏற்றம் என்றாலே மக்களுக்கு பாதிப்பு தானே, அது பற்றி மேலும் பேச விரும்பவில்லை.

கொரோனா காலகட்டத்தில் அரசின் எந்த நிறுவனமும் இயங்கவில்லை. அரசாங்கம் நஷ்டத்தில் இயங்கியது. எனவே அதை ஈடுகட்டுவதற்காக பொதுத்துறை நிறுவனங்களை வாடகைக்கு விடுகிறார்கள். ஏதோ பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தமாக விற்பது போல ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பேசி வருகிறது” என்றார்.

- பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com