\
கமல்ஹாசனுக்கு "டஃப்" கொடுக்கும் வானதி சீனிவாசன்!

கமல்ஹாசனுக்கு "டஃப்" கொடுக்கும் வானதி சீனிவாசன்!

கமல்ஹாசனுக்கு "டஃப்" கொடுக்கும் வானதி சீனிவாசன்!
Published on

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கடும் போட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இதில் நட்சத்திர தொகுதியான கோவை தெற்கில் கமல்ஹாசன் காலை முதில் முன்னணியில் இருந்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் முதல் சில சுற்று வாக்கு எண்ணிக்கையில் 2ஆவது இடத்தில் இருந்தார். இப்போது அவரை பின்னுக்கு தள்ளி பாஜகவின் வானதி சீனிவாசன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.

இப்போது கமல்ஹாசனுக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் வாக்கு வானதிக்கும் வாக்குகள் வித்தியாசம் 2 ஆயிரம் மட்டுமே இருப்பதால் கமல்ஹாசனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறார் வானதி சீனிவாசன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com