\
கங்கை அமரன் பாஜக வேட்பாளரா? மேலிடம் முடிவு செய்யும்: தமிழிசை

கங்கை அமரன் பாஜக வேட்பாளரா? மேலிடம் முடிவு செய்யும்: தமிழிசை

கங்கை அமரன் பாஜக வேட்பாளரா? மேலிடம் முடிவு செய்யும்: தமிழிசை
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வரும் நிலையில் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.

ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், தேமுதிக சார்பில் மதிவாணன் போட்டியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்-அம்மா பேரவை சார்பில் தீபா போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்தத் தேர்தலில் பாஜகவும் களமிறங்குகிறது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மூன்று பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் கூறினார். அந்த மூன்று பேரில் இசை அமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் பெயரும் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்தான் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com