“மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது” - அண்ணாமலை ஆவேசம்

“மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது” - அண்ணாமலை ஆவேசம்
“மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது” - அண்ணாமலை ஆவேசம்

மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் உறுதியாக உள்ளோம் எனவும் மேகதாதுவில் அணை கட்டும் தங்கள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியிருந்தார். சட்டப்படி தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாகவும், காவிரியின் உபரிநீரை பயன்படுத்திக்கொள்வது தங்கள் உரிமை என்றும் தெரிவித்திருந்தார். பிரதமரை சந்தித்து உரிய அனுமதி பெற்று விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் எனவும் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார்.

இந்நிலையில், “மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது. மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேலும், மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com