\
"முதல்வர் ஸ்டாலின் இன்னுமா இதனை உணரவில்லை?" - அரசின் அழைப்பிற்கு அண்ணாமலை கடிதம்

"முதல்வர் ஸ்டாலின் இன்னுமா இதனை உணரவில்லை?" - அரசின் அழைப்பிற்கு அண்ணாமலை கடிதம்

"முதல்வர் ஸ்டாலின் இன்னுமா இதனை உணரவில்லை?" - அரசின் அழைப்பிற்கு அண்ணாமலை கடிதம்
Published on

நீட் தேர்வு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால் நாளைய அனைத்துக் கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் விலகிக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வுதான் உண்மையான சமூகநீதிக்கான அடையாளம் என்பதை முதல்வர் இன்னுமா உணரவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக பாஜக தயாராக உள்ளது எனவும், உண்மையும், நேர்மையும் இருக்க வேண்டும்; மக்களை ஏமாற்றும் பிரச்னைகளுக்கு துணைநிற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com