\
மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை

மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை

மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை
Published on: 

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் திமுக பெயர் மாற்றம் செய்து, அரசியல் செய்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பேசும்போது,

மத்திய பாஜக 8 ஆண்டு கால ஆட்சியில் மக்களும், பெண் சமுதாயத்தினரும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.  திமுக ஆட்சியின் ஒரு ஆண்டில் மக்களுக்கு சலிப்பு தட்டி விட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு நாள்தோறும் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அண்மைக்காலமாக தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது. மத்திய பாஜக அரசு திட்டங்களை தமிழகத்தில் திமுக பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்து வருகிறது. ஆனைமலையாறு நல்லாறு திட்டம், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக கொண்டு வர பாஜக பாடுபடும். 2024 நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்வார்கள்” என மாநாட்டில் பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com