தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கும் பாஜக! எந்த தொகுதி தெரியுமா?

18 ஆவது மக்களவை தேர்தல் ஜூன் 1 முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. இதில், தமிழ்நாட்டில் தற்போது வரை பாஜக கூட்டணி ஒரேயொரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் வகிக்கிறது.
சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிpt web

18 ஆவது மக்களவை தேர்தல் ஜூன் 1 முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் தற்போதுவரை பாஜக கூட்டணி ஒரேயொரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 20 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இவையன்றி இதன் கூட்டணி கட்சிகளான பாமக 10, த.மா.கா - 3, அ.ம.மு.க. - 2, புதிய நீதிக்கட்சி - 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1 இடங்களில் போட்டியிடுகின்றன. இப்படியாக தமிழ்நாட்டில் மொத்தமாக 39 மக்களவை தொகுதிகளில் களம் கண்டது பாஜக.

இந்நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சௌமியா அன்புமணி
வாரணாசி| பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் காங். வேட்பாளர்.. யார் இந்த அஜய் ராய்?

அங்கு 11:40 மணி நிலவரப்படி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். சௌமியா அன்புமணி சுமார் 47,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணி சுமார் 32,000 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அசோகன் சுமார் 27,000 வாக்குகளும் பெற்று பின்னடவை சந்தித்து வருகின்றனர். இங்கு மட்டுமே பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் முன்னிலை வகிக்கிறது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிPT

இவை தவிர்த்து தமிழ்நாட்டின் வேறு எந்த தொகுதியிலும் பாஜகவும், பாஜக கூட்டணியும் முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணி விருதுநகரில் தேமுதிக கூட்டணியில் முன்னிலை வகிக்கிறது. அங்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் களம் கண்டுள்ளார். இவை தவிர்த்து தமிழ்நாட்டில் மீதமுள்ள 37 இடங்களிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் திமுக-வே முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com