கம்பிகளை கழுத்தில் சுற்றும் விநோத மனிதன்: மீட்டெடுத்த அறக்கட்டளை

கம்பிகளை கழுத்தில் சுற்றும் விநோத மனிதன்: மீட்டெடுத்த அறக்கட்டளை
கம்பிகளை கழுத்தில் சுற்றும் விநோத மனிதன்: மீட்டெடுத்த அறக்கட்டளை

இரண்டு ஆண்டுகளாக கழுத்தில் கம்பிகளை சுற்றி கொண்டு திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ‘ஈரநெஞ்சம்’ அறக்கட்டளையால் மீட்கப்பட்டுள்ளார்.

கோவை ‘ஈரநெஞ்சம்’ அறக்கட்டளை மற்றும் ‘ஒய்ஸ் மென் கிளப்’ இணைந்து கோவை தெருக்களில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அந்தோணி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கழுத்து, இடுப்பு, கால்களில் இரும்பு கம்பிகளை வளைத்து சுற்றியிருந்ததை கண்டிருக்கின்றனர். கம்பிகள் உடல் பாகங்களை இறுக்கி ரத்தம் வலிந்த நிலையில் அவர் காணப்பட்டார். உடனே அவரை மீட்ட அறக்கட்டளையினர், அவரது கழுத்து மற்றும் உடலில் சுற்றியிருந்த இரும்பு கம்பிகளை மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெட்டி எடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவரிடம் விசாரித்ததில் புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பதை அறிந்து அவரை குடும்பத்துடன் சேர்த்துள்ளனர். 

மீட்கப்பட்ட அந்தோணி உடற்பயிற்சி செய்யும் போது அவரது தலையில் இரும்பு கம்பி பட்டு நினைவுகள் அற்று சுற்றி திரிந்துள்ளார். மனநலம் பாதிக்கபப்ட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அந்தோணி, அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை தேடிய குடும்பத்தாரும் நீண்ட நாட்களாக அந்தோணி கிடைக்காததால் தேடுவதை நிறுத்தி விட்டனர். இந்த சூழலில் இரும்பு கம்பிகளை கண்டால் தனது கழுத்து உடல் என இரண்டு ஆண்டுகளாக சுற்றிகொண்டு, உலா வந்த அவரை ரண வேதனையில் இருந்து மீட்டதுடன் குடும்பத்துடன் சேர்த்ததில் சமூக அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com