பிட்காயின் மோசடி – டிஜிபி சைலேந்திர பாபு பதிவிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ

பிட்காயின் மோசடி – டிஜிபி சைலேந்திர பாபு பதிவிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ
பிட்காயின் மோசடி  – டிஜிபி சைலேந்திர பாபு பதிவிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ

பிட்காயின் பேராசை பெருநஷ்டம்' தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'பிட்காயின் மூலம் பணத்தை கட்டி ஏமாறவேண்டாம் என்றும் முதலில் பணத்தை முதலீடு செய்ய வலியறுத்தி பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாக நம்ப மறுமுறையும் அதேபோன்று இரட்டிப்பாக பணத்தை அளித்து நம்பவைத்து அதன் பின்பு பணம் அதிகளவில் முதலீடு செய்த பிறகு ஏமாற்றிவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே இதுகுறித்து எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் காவல்துறையை சேர்ந்த நண்பர்களே 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை எல்லாம் பிட்காயின் நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வங்கிகள் கொடுக்கும் பணத்தை வட்டியை விட வேறு யாரும் பணத்தை அதிகளவில் தர இயலாது.

பிட் காயினை பொறுத்தவரை பேராசை பெருநஷ்டம். பொதுமக்கள் அனைவரும் இதில் பணத்தை முதலீடு செய்து ஏமாறவேண்டும்' என காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ குறிப்பில் எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு செய்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com