\
பிரியாணி
பிரியாணிpt web

6 பிரியாணி சாப்டா போதும்..ஒரு லட்சம் பரிசு.. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பங்கேற்ற தந்தை

கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் அறிவிக்கப்பட்ட வினோத சலுகையால், பிரியாணி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
Published on

கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் சுவாரஸ்யமான பிரியாணி போட்டி ஒன்று நடைபெற்றது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய் என்றும், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதில் உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

உணவக உரிமையாளர் பாபி செம்மனூர் போட்டியை தொடங்கிவைத்ததை அடுத்து, பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு பிரியாணியை சாப்பிட்டனர். அதிக அளவில் பிரியாணியை சாப்பிட முடியாமல் பெரும்பாலானவர்கள் திணறினர். சிலர் சாப்பிட முடியாமல் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினர்.

பிரியாணி
கார் வாங்குவோர் கவனத்திற்கு.. நிறுவனங்களின் அசத்தல் அறிவிப்பு..

இதற்கிடையே, சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், வாகனத்தை நிறுத்திச் சென்றோரிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இந்த போட்டியில் கலந்துகொண்ட கணேச மூர்த்தி என்பவர், ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட, தன் மகனின் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் நோக்கத்தில் கலந்துகொண்டதாக கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com