'மக்களால் நீங்கள், மக்களுக்காகவே நீங்கள்' மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள பிறந்தநாள் போஸ்டர்
தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித்திற்கு நாளை (மே 1) பிறந்தநாள். அவர் நாளை தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் தற்போது தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள், அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்... உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை என தலைமைச் செயலக புகைப்படத்துடன் மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
ஏற்கெனவே நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.