Birds
Birdspt desk

ஏரி எங்கும் 22,000 பறவைகள்: பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்! வேடந்தாங்கலின் கண்கொள்ளா காட்சி!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி நிரம்பியதால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் குவிந்துள்ளன. ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் கடைசி வாரம் முதல், ஆஸ்திரேலியா, சைபீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து கூழைக்கடா, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, பாம்பு தாரா, சாம்பல் நிற கொக்கு, உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து விட்டு மீண்டும் மே .ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

Vedanthangal
Vedanthangalpt desk

இந்நிலையில், மிக் ஜாம் புயல் காரணமாக எரி முழு கொள்ளவு எட்டியதை அடுத்து சரணாலயத்திற்கு பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது சரணாலயத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. தொடர் விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சரணாலயத்திற்கு வருகை தந்து பறவைகளைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com