தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தம்

தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தம்
தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐ தாண்டியுள்ளது. இதனிடையே கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டிய நிலை இல்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவை நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஓமனிலிருந்து காஞ்சிபுரம் திரும்பியவர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுதவிர 8பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தை சேர்ந்த நோய் பாதித்தவருடன் நேரடி தொடர்ப்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 19 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com