\
ஜெயலலிதா வாழக்கை வரலாறு: தலைவி படம் வெற்றிபெற கோயிலில் சிறப்பு பூஜை

ஜெயலலிதா வாழக்கை வரலாறு: தலைவி படம் வெற்றிபெற கோயிலில் சிறப்பு பூஜை

ஜெயலலிதா வாழக்கை வரலாறு: தலைவி படம் வெற்றிபெற கோயிலில் சிறப்பு பூஜை
Published on

தலைவி படம் வெற்றிபெற கோயிலில் சாமி தரிசனம் செய்து கேக் வெட்டி கொண்டாடி அதிமுகவினர் படம் பார்த்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் தலைவி என்ற பெயரில் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை காண அதிமுகவினர் அதிகளவில் தியேட்டர்களில் திரண்டனர். பூந்தமல்லியில் உள்ள ஒரு தியேட்டரில் பூந்தமல்லி அதிமுக சார்பில் தலைவி படம் வெற்றி பெற முன்னாள் எம்.பி.வேனுகோபால் தலைமையில் குமனண்சாவடியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து தியேட்டரின் முன்பு திரைப்படம் வெற்றிபெற பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். மேலும் படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர். 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தலைவி படத்தை தியேட்டரில் கண்டு ரசித்தனர் படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா குறித்த காட்சிகள் வரும்போது அதிமுகவினர் விசில் அடித்தும் கைதட்டியும் ஆரவாரத்தோடு கண்டு ரசித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com