\
வேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு 

வேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு 

வேன் மீது பைக் மோதி விபத்து : அண்ணன் - தம்பி உயிரிழப்பு 
Published on

பெரம்பலூரை அடுத்த கீழப்பழூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில், அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூரை சேர்ந்தவர் முஜிபுல்லா. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஃபையாஸ், ஜமீல் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். முஜிபுல்லா வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த நிலையில் அவருக்கு தேவையான சில பொருட்களை அவரது நண்பரிடம் கொடுத்து விட ஃபையாஸ் மற்றும் ஜமீல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்றுள்ளனர். 

அப்போது, கீழப்பழூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அரியலூர் நோக்கி எதிராக வந்துகொண்டிருந்த வேனின் மீது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற இருவரும் வேனுக்கு அடியில் சிக்கி கொண்டனர். மேலும் அருகில் இருந்த சுவரில் வேன் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. 

இதில் பைக்கில் சென்ற அண்ணன் தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 
 
மேலும் வேனில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். லேசான காயங்களுடன் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com