\
ஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்

ஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்

ஹார்ன் அடித்ததால் ஆத்திரம் : பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்
Published on

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி செல்லும் அரசுப்பேருந்தை ஓட்டுநர் ஸ்ரீதர் இயக்கிவந்தார். பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற பைக் ஓரமாக செல்லவேண்டுமென ஓட்டுநர் ஹார்ன் அடித்துள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கவின் என்பவருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன் நடத்துனருடனும் கவின் வாக்குவாதம் செய்தார்.

அப்போது கவின் நடத்துனர் ஜெயப்பிரகாஷ் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினார். மேலும் தனது நண்பரையும் வரவழைத்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் அவர் நடத்தியாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீதும் கவின் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com