தமிழ்நாடு
அண்ணா சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டியவர் உயிரிழப்பு
அண்ணா சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டியவர் உயிரிழப்பு
சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தை அதிக வேகமாக இயக்கி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை அண்ணா சாலையில் பென்சர் பிளாசா அருகே 7-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டு, தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இளைஞர்கள் இருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் விக்ரம் என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.