தமிழ்நாடு
சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பொறுப்பேற்றார் பூபதி
சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பொறுப்பேற்றார் பூபதி
தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை செயலாளராக இருந்து வந்த ஜமாலுதீன் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனையடுத்து சட்டப்பேரவையின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பூபதி, சபாநாயகர் அறையில் தனபால் முன்னிலையில் தனது பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். புதிய செயலாளராக பொறுப்பேற்ற பூபதிக்கு சபாநாயகர் தனபால் அப்போது தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
பூபதி சட்டப்பேரவையில் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்தவர்.