போகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

போகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

போகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
Published on

தமிழகத்தில் போகி பண்டிகையையொட்டி தேவையற்ற பொருட்கள் எரிக்கப்பட்டதால் புகைமூட்டம் ஏற்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுதலாக கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.அதிகாலையிலேயே மக்கள் எழுந்து வீடுகளை சுத்தம் செய்ய தொடங்கினர். கடும் குளிரிலும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு மக்கள் எரித்தனர்.

தலைநகர் சென்னையில் அதிகாலையிலேயே வீதிகளில் குவிந்த சிறுவர்கள், மேளம் அடித்தவாறே பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னையை கடுமையான புகைமூட்டம் சூழ்ந்தது. பழைய பொருட்களை எரிப்பதால் பனியுடன் சேர்ந்து சென்னை புகைமண்டலமாக  காட்சியளிக்கிறது. இதனால் சாலைகளில் வெளிச்சம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com