\
''பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை சீராக உள்ளது'' - மருத்துவமனை தகவல்

''பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை சீராக உள்ளது'' - மருத்துவமனை தகவல்

''பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை சீராக உள்ளது'' - மருத்துவமனை தகவல்
Published on: 

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை, சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதி பாஸ்கர் பூரண நலம்பெற பிரார்த்திப்பதாக பிரபலங்களும் பட்டிமன்ற ரசிகர்களும் சமூக ஊடகங்களில் தெரிவித்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com