"நேற்றுவரை சொன்னதைத்தான் பாஜக இன்று பயன்படுத்துகிறது" - ஆவேசமாக பேசிய கோலாகல ஸ்ரீநிவாஸ்!

”எதிர்க்கட்சிகள் INDIA கூட்டணி எனப் பெயர் வைத்தற்காக யாரும் பயப்படவில்லை” என பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், ”பாஜக இந்துத்வா கட்சி. அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸும் பாரதம் என்றே கூறுவார்கள். பாஜகவின் அரசியல் கலாசாரம் தெரியாதவர்கள்தான் இதை விவாதிக்கொண்டிருப்பார்கள்.

அவர்கள் எப்போதும் பாரதம் என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்கள். அவர்கள் நேற்றுவரை சொன்னதைத்தான் இன்று பயன்படுத்துகிறார்கள். எதிர்க்கட்சிகள் INDIA கூட்டணி எனப் பெயர் வைத்தற்காக யாரும் பயப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com