"ஏற்கெனவே ’பாரத்’னு தான் இருந்துச்சு; பிரிட்டிஷ் தான் இந்தியான்னு பேர் வச்சாங்க"-பொன்.ராதாகிருஷ்ணன்

”பிரிட்டிஷார் காலத்தில் இந்தியா என பெயர் வைத்துள்ளனர். மற்றபடி பாரத்தான்” என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுகுறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அது, ஏற்கெனவே இருக்கக்கூடியது. பாரத் என்பது இந்தியாவினுடைய ஒரு பெயர். தமிழ்நாடு, தமிழகம் என்று சொல்றதைப் போன்று பாரத் என்கிற பெயரும் இருக்கக்கூடியதே. ஒரு தவறான பெயர் இதற்கு முன்பு சொல்லப்பட்டிருக்குமானால் அதை விவாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இது அப்படி கிடையாது. இது, மாற்றவேண்டிய அவசியமில்லை. இது, ஏற்கெனவே பாரத்தான். பிரிட்டிஷார் காலத்தில் இந்தியா என பெயர் வைத்துள்ளனர். மற்றபடி பாரத்தான். எதிர்க்கட்சிகள் இன்று அரசியல் செய்வதற்கு இந்தியா பெயரைப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com