இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் 20 கட்சிகள் பங்கேற்கின்றன.
பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவு குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியது. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்திலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணி வரை முழுஅடைப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Read Also -> 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!
இந்த முழு அடைப்பு போராட்டத்தில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதேபோல், கம்யூனிஸ்ட்கள், திமுக, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது.