தீப திருவிழா: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்!

தீப திருவிழா: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்!
தீப திருவிழா: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்!

தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் இரவும் பகலும் நடைபெற்று வருகிறது. இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. நள்ளிரவு முதல் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்களும் அபிஷேக ஆராதனைகளும் செய்விக்கப்பட்டன.

அதிகாலை 3 மணியில் இருந்து கோயிலின் கருவறையின் முன்பு உள்ள தீப மண்டபத்தில் சிவாச்சாரியார் கள் வேத மந்திரம் முழங்க, கருவறையிலிருந்து ஏற்றிவரப்பட்ட ஒரு விளக்கிலிருந்து 5 விளக்குகள் ஏற்றி அந்த ஐந்து விளக்கிலிருந்து ஒரு விளக்காக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த விளக்கு கோயிலின் முதல் பிரகாரம், அம்மன் சந்நிதியை வலம் வந்தது. இது இறைவன் ஏகன் அநேகனாகி மறுபடியும் அநேகன் ஏகனாவதை குறிக்கும் தீபமாகும்.

இந்நிகழ்வில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தீரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்துக்காக ஆறடி உயரமுள்ள செம்பிலான கொப்பரை நேற்று மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. திருவண்ணாமலை மகாதீபத்தை காண ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பக்தர்கள் வருவது வழக்கம்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மகாதீபத்தை பக்தர்கள் நேரில் காணாத குறையை போக்கும் வகையில் இன்று மாலை நாலரை மணி முதல் புதிய தலைமுறையில் சிறப்பு நேரலையை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com