\
“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு

“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு

“பணம் பறிக்கும் நோக்கில் ஜெயஸ்ரீ வீண்பழி சுமத்துகிறார்”- சித்ரவதை புகாருக்கு கணவர் மறுப்பு
Published on

சின்னத்திரை நடிகை ‌ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்து நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்டு, தனது மகளையும் சித்ரவதை செய்து வருவதாக கணவர் ஈஸ்வர் மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார் நடிகை ஜெயஸ்ரீ. மேலும் தனது கணவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்ததை அடுத்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக வசித்து வந்த தன்னை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஈஸ்வர் ,  குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிவித்திருந்தார். இதுதவிர கணவர் ஈஸ்வர், வேறொரு நடிகையுடன் தகாத உறவில் இருந்ததை ஆறு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடித்ததாகவும் அன்று முதல், ஈஸ்வரின் சித்ரவதை எல்லை மீறிச் சென்றுவிட்டதாகவும் ஜெயஸ்ரீ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். 

இதனையடுத்து ‌கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஈஸ்வர், ‌தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வர், ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய் என்றும், பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் குழந்தையை தானே வளர்த்து வருவதாகவும் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். அத்துடன் தன்னுடைய பெற்றோரை விரட்டி விட்டு அந்த வீட்டில் ஜெயஸ்ரீ குடியிருந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com