காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ

காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ
காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டு காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது

அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. அதற்கு மூளையாக செயல்பட்ட பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகன் மீது கர்நாடகாவில் மட்டும் 115 கொள்ளை வழக்குகள் உள்ளன. 

லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக முருகனை காவலில் எடுக்க திருச்சி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 19 வீடுகளில் முருகன் கைவரிசை காட்டியுள்ளார். எனவே அதுதொடர்பான விசாரணைக்காக அவரை சென்னை அழைத்துவர அண்ணாநகர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டு காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. திருவாரூர் முருகன் கொடுத்த தகவலின் பேரில் அக்டோபர் 12ஆம் தேதி திருச்சி பூசந்துறையில் காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com