'' கே.பி.பார்க் குடியிருப்பு பயனாளிகளிடம் கட்டணத்தை வசூலிக்க கூடாது''- திருமாவளவன் எம்.பி.
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகளிடம் வசூலிக்க திட்டமிட்டுள்ள ஒன்றரை லட்சம் ரூபாயை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இதையடுத்து அங்கு அரசு சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கே.பி.பார்க் குடியிருப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டடத்தை ஐ.ஐ.டி நிபுணர் குழு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த மக்களிடம் அரசு வசூலிக்க திட்டமிட்டுள்ள 1.50 லட்சம் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.