ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு.. பீப் பிரியாணி சர்ச்சை காரணமா?

ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு.. பீப் பிரியாணி சர்ச்சை காரணமா?
ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு.. பீப் பிரியாணி சர்ச்சை காரணமா?

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறி பல்வேறு கட்சியினர், தலித் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ‘இலவச மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்படும்’ என்று அறிவித்தனர். இந்த நிலையில், பிரியாணி விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில், வருகின்ற 13, 14, 15, ஆகிய தினங்களில் பிரியாணி திருவிழா நடத்தப்பட்டு அதற்கான ஆவணங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா முயற்சி செய்து வருகிறார். பிரியாணி திருவிழா நடைப்பெறும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா திருப்பத்தூர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணியம் ஆகியோர் இன்று திருவிழாவிற்கான ஆயதப்பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டனர்.

இந்நிலையில் இப்பிரியாணி திருவிழா நடைப்பெறும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 30 கடைகள் அமைக்கப்பட்டு 50 வகையான கோழி கறி பிரியாணி, ஆட்டுக்கறி பிரியாணி ஆகிய இரண்டு வகை பிரியாணிகள் மட்டுமே அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பட்டதாக ஆம்பூர் பகுதிகளில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர், பகுஜன் சமாஜ், SDPI, தலித் கூட்டமைப்புகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

தங்கள் அமைப்புகள் சார்பில் மாட்டிறைச்சி பிரியாணி வர்த்தக மையத்தின் வெளியே மாட்டிறைச்சி பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து ஆம்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி கடைகள் மற்றும் உணவக உரிமையாளர்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மேலும், ஆம்பூர் அதிக அளவு இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாகும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு 4000 கிலோ மாட்டிறைச்சி பிரியாணி செய்யப்பட்டு விற்பனையாகிறது. ஆம்பூரில் பெரும்பாலான மக்களினையே மாட்டிறைச்சி பிரியாணி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முதலாக நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில் இடப்பெறாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது செய்திகள் வெளியானவுடன் வர்த்தக மைய கட்டிடத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.

இதனிடையே, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்ற தலித் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நடைபெற்ற கூட்டத்தில் நாளை வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே மாட்டிறைச்சி பிரியாணி இலவசமாக வழங்கப்படுவதாகவும், மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், முக்கியமான அறிவிப்பு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதுதான அந்த அறிவிப்பு. ’சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்களில் 13.05.2022 மற்றும் 14.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்  இடியுடன் கூடிய கனமழை பொழியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com