நீர்நிலைகளில் உயர்ந்த நீர்மட்டம் - காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டிய கிரண் பேடி

நீர்நிலைகளில் உயர்ந்த நீர்மட்டம் - காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டிய கிரண் பேடி
நீர்நிலைகளில் உயர்ந்த நீர்மட்டம் - காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டிய கிரண் பேடி

தூர் எடுத்தல் மற்றும் பராமரித்ததன் மூலம் நீர் நிலைகளில் உள்ள நீரின் தேக்கம் அதிகரித்துள்ளதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பாராட்டியுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தை பார்வையிட்ட புதுச்சேரி ஆளுநர் அது குறித்து ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டார். அதன்படி, “காரைக்கால் மாவட்ட நிர்வாகம் 178 குளங்களை தூர்வாரியுள்ளது. மேலும் 800கிமீக்கும் அதிகமான வாய்கால்களை சுத்தம் செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மிகச்சிறப்பாக பணியாற்றி காரைக்காலை மாற்றியுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜாவும், அவரது அணியும் அரசுடனும், மக்களுடனும் கைகோர்த்து நீர் நிலைகளை சீரமைத்துள்ளனர். நன்கொடையாளர்கள் குளங்களை தத்து எடுத்து அதனை பராமரிக்க வேண்டும்.

மாவட்டத்தில் வனப்பகுதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். நீர் நிலைகளை தத்து எடுத்து சிறப்பாக பாராமரித்த நன்கொடையாளர்களை கவுரவிக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என கிரண் பேடி தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com