முதல்வர் ஓடுவதால்தான் நாங்களும் ஓடிக் கொண்டிருக்கிறோம் - கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

முதல்வர் ஓடுவதால்தான் நாங்களும் ஓடிக் கொண்டிருக்கிறோம் - கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
முதல்வர் ஓடுவதால்தான் நாங்களும் ஓடிக் கொண்டிருக்கிறோம் - கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

முதலமைச்சர் ஓடுவதால் தான் நாங்களும் ஓடிக் கொண்டிருக்கிறோம். எங்களையும் அதிகாரிகளை முதலமைச்சர் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலகலப்பாக பேசினார்.

சென்னை மண்ணடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மேன்மை இறையாண்மை நல்லிணக்க அரங்க துவக்கவிழா நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சூரியனார் கோயில் ஆதினம் மகாலிங்க தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி அமைச்சர் கே.கே..எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன பேசினார். அப்போது... சேகர்பாபு ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. சேகர்பாபுவை எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரியும்... எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தாருங்கள் என்று முதல் முதலில் என்னிடம் வேலை கேட்டு வந்தார். நான் அந்த சமயத்தில் அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருந்தால் உங்களுக்கு வேலை பார்க்க ஆள் இல்லாமல் போயிருக்கும்.

சேகர்பாபுவை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது. ஒரு மனிதன் எவ்வாறு எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க முடியும் என்று. ஆண்களுக்கு ஏன் இலவசமாக பேருந்து பயணம் வழங்கவில்லை. நமக்கு கொடுத்தால் எங்கே போய் சேரும் என்று எல்லாருக்கும் தெரியும். வீட்டு வாசல் வரைதான் நாங்கள் அமைச்சர் எல்லாம். வீட்டுக்குப் போய்விட்டால் எங்களுடைய பதவியெல்லாம் மனைவியிடம் சென்றுவிடும். பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாடுதான் தமிழ்நாடு.

முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தை பார்த்தால் எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. அவர் ஓடுவதால் தான் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஓடவைக்க கூடிய முதலமைச்சர் அதிகாரிகளையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறார் என்று கலகலப்பாக பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் ராமசந்திரனை பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். எங்களுடைய காலத்தில் அவர் எங்களுக்கு முன்மாதிரி. எம்.ஜி.ஆர்.அவரை ஜமீன்தார் என்றும் முதலமைச்சர் அவரை முதலாளி என்றும் அழைப்பார்கள். 9 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமைச்சர் ராமசந்திரன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com