தமிழ்நாடு
குடியிருப்புக்குள் புகுந்த கரடி: பொதுமக்கள் பீதி
குடியிருப்புக்குள் புகுந்த கரடி: பொதுமக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குருக்கத்தி கிராம பகுதியில் திடீரென கரடி நுழைந்து அட்டகாசம் செய்தது. ஆகவே அப்பகுதியில் மக்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், தேயிலை விவசாயிகளை கரடி அச்சுறுத்தியதைச் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கரடியை வனப்பகுதிகளுக்குள் விரட்டினர். இக்கிராமம் அடர்ந்த தேயிலை தோட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் கரடி அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி இதை போல வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுவதாகவும் உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். அரசு உடனே நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

