உழைப்பை போற்றுவோம்: பி.இ. படித்துவிட்டு சுமைதூக்கும் இளைஞர் லோகநாதன்!

உழைப்பை போற்றுவோம்: பி.இ. படித்துவிட்டு சுமைதூக்கும் இளைஞர் லோகநாதன்!
உழைப்பை போற்றுவோம்: பி.இ. படித்துவிட்டு சுமைதூக்கும் இளைஞர் லோகநாதன்!

பொறியியலில் மெக்கானிக்கல் படித்து முதல் வகுப்பில் பட்டம் பெற்ற இளைஞர் இன்று மூட்டை தூக்கி உழைத்து வருகிறார். 

ஈரோட்டைச் சேர்ந்த லோகநாதன் மெக்கானிக்கல் பிஇ படித்து பட்டம் பெற்றவர். படித்துமுடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு கிளம்பியவர் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதும் ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். தந்தை ராமசாமி மறைந்த நிலையில் தன்னுடைய தாய் செய்து வந்த வேலையான மூட்டை தூக்கும் பணியை கையிலெடுத்தார் லோகநாதன். 

பொறியியல் படித்துவிட்டு மூட்டை தூக்கலாமா? படித்து படிப்புக்கு தானே வேலைபார்க்க வேண்டும் என்ற எந்த தயக்கமெல்லாம் அவருக்கு இல்லை. உழைப்பில் என்ன சிறியது? பெரியது? செய்யும் தொழிலே தெய்வம் என்று உழைப்பை தொடங்கிவிட்டார் லோகநாதன்.

தான் செய்யும் வேலை குறித்து பேசிய லோகநாதன் '' படித்துவிட்டு மூட்டை தூக்கும் வேலை எதற்கு என பலரும் கேட்பார்கள். என் அம்மாவும் கூட அதுவே சொல்வார். ஆனால் எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. ஒரு நாளைக்கு நூறு பேல்கள் வரை ஏற்றி இறக்க வேண்டி வரும். மொத்தம் ஆயிரம் கிலோ ஏற்ற இறக்க வேண்டி வரும்.

அதிக சுமைகளை சுமப்பதால் முழங்கால்வலி, முதுகுவலி ஏற்படும். ஆனால் குடும்ப சூழ்நிலைக்காகவும்,கவுரவமான வாழ்க்கைக்காவும் இந்த வேலையை செய்கிறேன். ஏமாற்றியோ, திருடியோ பிழைக்காமல் உழைத்து வாழ்கிறேன் என்பதே எனக்கு பெருமை'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com