தமிழ்நாடு
மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பி.இ. கலந்தாய்வு
மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பி.இ. கலந்தாய்வு
மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
நீட் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை பொறுத்தே பொறியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று பொறியியல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டபின் பேசிய அவர், தரவரிசையில் 59 மாணவர்கள் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பலர் மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, நீட் முடிவுக்கு ஏற்ப, பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.