chennai
chennaifacebook

சென்னை | 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு

சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபான கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ், ஹையத் ரீஜன்ஸி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபான கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.

அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்துள்ளன.

இதையடுத்து 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபான கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

chennai
ஈரோடு | சிறையில் இருந்து பிணையில் வந்த மகன்... மறுநொடியே மீண்டும் கைது; சிறைவாசலில் கதறி அழுத தாய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com