ஊட்டி சாலையில் ரிங்கா ரிங்கா ரோஸ் விளையாடும் காட்டெருமைகள்!

ஊட்டி சாலையில் ரிங்கா ரிங்கா ரோஸ் விளையாடும் காட்டெருமைகள்!
ஊட்டி சாலையில் ரிங்கா ரிங்கா ரோஸ் விளையாடும் காட்டெருமைகள்!

’மலைகளின் அரசி’ எனப்படும் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையின் நடுவே உள்ள வட்டமான இடத்தில் காட்டெருமைகள் வரிசையாக வட்டமடித்து சுற்றிச்சுற்றி வரும் கொள்ளையழகு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/SudhaRamenIFS/status/1288853499585990657

இந்த அழகான வீடியோவை வனத்துறை அதிகாரி சுதா ராமன் ஐ.எஃப்.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “குழந்தைகள் விளையாடும் ரிங்கா ரிங்கா ரோஸ் பாடல்போல் காட்டெருமைகள் விளையாடுகிறது. இதனை மக்களும் கண்டுகளிக்கிறார்கள். பொதுவாக மாடுகளைப் பார்த்தால் துரத்தியடிக்கும் மக்களுக்கு மத்தியில் நீலகிரி மக்கள் அவற்றை தொந்தரவு செய்யாமல் ரசிக்கிறார்கள்” என்று பாராட்டியும் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com