“தமிழகத்தை ரஜினி ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது” - இயக்குநர் பாரதிராஜா

“தமிழகத்தை ரஜினி ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது” - இயக்குநர் பாரதிராஜா

“தமிழகத்தை ரஜினி ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது” - இயக்குநர் பாரதிராஜா
Published on

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி எனவும் 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே கூறியுள்ளார். ஆனால், இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என்ற நோக்கில் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ரஜினிகாந்த் ஒரு எளிமையான நபர். என்னுடைய நண்பர். ஆனால் தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கர்நாடகத்தை கர்நாடககாரன்தான் ஆள வேண்டும் என்பது விதி. அதேபோல் தமிழகத்தை ஏன் மண்ணின் மைந்தன் ஆளக்கூடாது?

தவறான முன்னுதாரணத்தை வைத்துக்கொண்டு இப்போது அதை சொல்லக்கூடாது. தெரியாமல் தமிழன் தொலைத்துவிட்டான். இப்போது விழித்துக்கொண்டான். வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com