தமிழ்நாடு
மதுபானக் கடைக்கு எதிர்ப்பு...பாட்டில்கள் உடைப்பு
மதுபானக் கடைக்கு எதிர்ப்பு...பாட்டில்கள் உடைப்பு
திருப்பூர் கோல்டன் நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மதுபாட்டில்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் கோல்டன் நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஆண்கள் சிலர் இன்று காலை தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாருக்குள் புகுந்து மதுபான பாட்டில்களை உடைத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசமாக பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மதுபான கடையில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

