\
பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக நாளை பதவியேற்கிறார்

பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக நாளை பதவியேற்கிறார்

பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக நாளை பதவியேற்கிறார்
Published on

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவி ஏற்கிறார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணி அளவில் பன்வாரிலால் புரோத்ஹித்தின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முன்னதாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்த பன்வாரிலால் புரோஹித்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்  வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சென்னைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலாலை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரும் வரவேற்றனர். அத்துடன் காவல்துறை சார்பிலும் புதிய ஆளுநருக்கு அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவருக்கு, அங்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com