‌பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது

‌பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது

‌பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது
Published on

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலவர் பா.வீரமணிக்கு திருவள்ளுவர் விருதும், மருத்துவர் துரைசாமிக்கு அண்ணல் அம்பேத்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கூரம் மு.துரைக்கு பேரறிஞர் அண்ணா விருதும், பெருந்தலைவர் காமராசர் விருது நீலகண்டனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.பேராசிரியர் முனைவர் ச.‌கணபதிராமனுக்கு மகாகவி பாரதியார் விருதும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் பாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம் இந்த விருதுகளை வழங்குவார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com