திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு இல்ல விழாவில் பேனர்: போலீசார் வழக்குப்பதிவு

திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு இல்ல விழாவில் பேனர்: போலீசார் வழக்குப்பதிவு
திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு இல்ல விழாவில் பேனர்: போலீசார் வழக்குப்பதிவு

அப்பாவு இல்ல நிகழ்ச்சியில் பேனர் வைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பை சேர்ந்தவர் அப்பாவு. இவர் ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 1-ம் தேதி நடந்தது. பின்பு திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் தாமஸ் என்ற திருமண மண்டபத்தில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்பவர்களை வரவேற்பதற்காக திருமண மண்டபத்திற்கு முன்பு இரண்டு பக்கங்களிலும் இரண்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட காவல்துறையினர் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டதாகவும அதனை உடனடியாக அகற்றும்படி அங்கு இருந்தவர்களிடம் கூறினர். இருப்பினும் இரவு எட்டு மணிவரை அகற்றப்படவில்லை.

ஆகையால் பணகுடி கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மீது அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைத்ததாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெற்ற மண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு பேனர்களையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com