\
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த வங்கி: வைரலாகும் வீடியோ

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த வங்கி: வைரலாகும் வீடியோ

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த வங்கி: வைரலாகும் வீடியோ
Published on

புதுச்சேரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது குறித்த வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி வில்லியனூர் தேசிய வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை டெபாசிட் செய்யும் போது காசாளர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்ட போது, பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மாட்டோம் என அவரும் தெரிவித்துள்ளார். பின்னர் வாடிக்கையாளர், நாணயங்கள் வாங்கமாட்டோம் என்று எழுதி தாருங்கள் என்று மேலாளரிடம் கேட்டதற்கு கடிதம் எழுதிக் கொடுக்குமாறும், அதில் தான் கையொப்பமிடுவதாகவும் கூறியுள்ளார். இந்தக காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் எனவும், தடையின்றி வாங்கிக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தி வந்தாலும், சில வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com